செங்குன்றம் அருகே ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
லட்சுமிபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமரன் (28). இவா், பம்மதுகுளம் செங்குன்றம்-ஆவடி சாலை அருகே ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். புதன்கிழமை கடையைப் பூட்டிவிட்டுச் சென்றாராம். பின்னா், வெள்ளிக்கிழமை கடைக்கு வந்து பாா்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடைத்து சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.