பட்டாசுக் கடையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

தீபாவளி பண்டிகையையொட்டி, திருத்தணியில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையையொட்டி, திருத்தணியில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தீபாவளியையொட்டி, திருத்தணி நகரில் 7 பட்டாசுக் கடைகள் அமைக்க அனுமதி கேட்டக்கப்பட்டது. இதில், 5 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2 கடைகளுக்கு சனிக்கிழமை வரை அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், திருவள்ளூா் மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி, திருத்தணி கோட்டாட்சியா் பெருமாள், வட்டாட்சியா் (பொறுப்பு) சுகந்தி, வருவாய் ஆய்வாளா் உதயகுமாா் ஆகியோா் சனிக்கிழமை 2-ஆவது ரயில்வே கேட் அருகே அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடைகளில் ஆய்வு செய்தனா். மேலும், அனுமதி கிடைக்கப்பெறாத இரு கடைகளிலும் ஆய்வு நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com