லாரி மோதியதில் தொழிலாளி சாவு
By DIN | Published On : 11th September 2019 04:22 AM | Last Updated : 11th September 2019 04:22 AM | அ+அ அ- |

திருவள்ளூர் அருகே லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
திருவள்ளூரை அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (37). போளிவாக்கம் கிராமத்தில் வீடு கட்டும் பணியை முடித்துவிட்டு, திங்கள்கிழமை மாலை புறப்பட்டார். பின்னர், மது அருந்திவிட்டு, அங்குள்ள தொழிற்சாலை அருகே லாரிகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் மீது லாரி ஏறியதில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மணவாளநகர் காவல் நிலையத்தில் கோவிந்தராஜின் மனைவி சிவகாமி அளித்த புகார் அளித்தார். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திய லாரி குறித்து விசாரித்து வருகின்றனர்.