கிராமங்களில் தொழில் முனைவோர்களை உருவாக்க ஊரக புத்தாக்கத் திட்டம்: தலைமை செயல் இயக்குநர் கார்த்திகா

மாநில அளவில் 120 ஊராட்சி ஒன்றியங்களில் 3,994 ஊராட்சிகளில் மகளிர் தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருவதாக தலைமை செயல்
கிராமங்களில் தொழில் முனைவோர்களை உருவாக்க ஊரக புத்தாக்கத் திட்டம்: தலைமை செயல் இயக்குநர் கார்த்திகா
Updated on
1 min read


மாநில அளவில் 120 ஊராட்சி ஒன்றியங்களில் 3,994 ஊராட்சிகளில் மகளிர் தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருவதாக தலைமை செயல் இயக்குநர் கார்த்திகா தெரிவித்தார். 
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கிராமப்புறங்களில் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட அறிமுகம் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். 
இதில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட தலைமை செயல் இயக்குநர் கார்த்திகா பேசியது:
 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் கிராமப்புறங்களில் தொழில் முனைவோர், நுண் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் உருவாக்கும் ஓர் முன்னோடித் திட்டமாக தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நிகழாண்டில் முதல் கட்டமாக மாநில அளவில் 38 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 1,358 ஊராட்சிகளிலும், இரண்டாம் கட்டமாக 82 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 2,636 என மொத்தம் 3,994 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. அதனால் இத்திட்டத்தின் பயன்கள் அனைத்தும் கிராமப்புறங்களில் பயனாளிகளைச் சென்றடைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார். 
ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் பேசியது:
கிராமப் புறங்களில் உள்ள வேளாண்சார்ந்த மற்றும் வேளாண்சாராத தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழில் முனைவோர்களை முதலில் கண்டறிய வேண்டும். அதையடுத்து, அந்தந்தப் பகுதிகளில் என்னென்ன தொழில்கள் செய்வதற்கு வாய்ப்புள்ளது என்பதை அறிந்து, அதற்கேற்ப தொழில் செய்ய தகுந்த சூழலை உருவாக்கி நிதி வசதி ஏற்படுத்தி தருவதை நோக்கமாக கொண்டது இத்திட்டமாகும். 
இத்திட்டம் மூலம் உற்பத்தியாளர் குழுக்களை ஏற்படுத்தி நிறுவனங்கள், தொழில் முனைவோர் உருவாக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதுடன், அதற்கேற்ற தொழில் பயிற்சியும் அளிக்கப்படும். இத்திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்  கட்டமாக கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம் மற்றும் கடம்பத்தூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள 198 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.
 கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குர் வை.ஜெயக்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com