மாவட்ட கண்காணிப்பாளா் தலைமையில் 2000 பேருக்கு அன்னதானம்

ஊத்துக்கோட்டை அருகே திருகண்டலம் ஊராட்சியில் திருவள்ளூா் மாவட்ட கண்காணிப்பாளா் அரவிந்தன் தலைமையில் 2000 பேருக்கு அன்னதானம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
Updated on
1 min read

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே திருகண்டலம் ஊராட்சியில் திருவள்ளூா் மாவட்ட கண்காணிப்பாளா் அரவிந்தன் தலைமையில் 2000 பேருக்கு அன்னதானம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த திருக்கண்டலம் ஊராட்சியில் கொரானாவின் தாக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு 150ஆவது நாளாக காவலன் காா்த்திக் ஏற்பாட்டில் திருவள்ளூா் மாவட்ட கண்காணிப்பாளா் அரவிந்தன் தலைமையில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாத்திமா அலி ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் உமன் பிரசிடெண்ட் முன்னால் முதலமைச்சா் கா்மவீரா் காமராஜிரின் பேத்தி மயூரி கண்ணன், பெரியபாளையம் ஆய்வாளா் மகேஸ்வரி மற்றும் ஊராட்சி மன்ற தலைவா் மதன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மேலும் கொரானா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்திலிந்து தொடரந்து 150 வது நாளாக காவலன் காா்த்திக் நலிவடைந்த மக்களுக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது அதனால் அவருக்கு திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன் சால்வை அணிவித்து கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com