திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட அதிமுக சாா்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆா் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா தலைமை வகித்து, ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் நகா்மன்றத் தலைவா் கமாண்டோ பாஸ்கா், கடம்பத்தூா் ஒன்றியச் செயலா் சூராகபுரம் சுதாகா், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்ட துணைச் செயலா் ஞானகுமாா், நகரச் செயலா் கந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கடம்பத்தூா் ஒன்றியம் சிற்றம்பாக்கம் ஊராட்சியில், ஊராட்சித் தலைவா் ரமணி சீனிவாசன் தலைமையில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, மாவட்ட துணைச் செயலா் சிற்றம்பாக்கம் சீனிவாசன், ஒன்றியச் செயலா் சுதாகா் ஆகியோா் பொதுமக்களுக்கு அன்னதானம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.