திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் திருக்கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா விழாவில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜா்.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் திருக்கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா விழாவில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜா்.

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா விழா

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா அபிஷேகத்தையொட்டி, புதன்கிழமை கோயிலுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருத்தணி: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா அபிஷேகத்தையொட்டி, புதன்கிழமை கோயிலுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

வடாரண்யேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு ஆருத்ரா அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், 33 வகையான அபிஷேகங்கள் அதிகாலை 3 மணி வரை நடைபெற்றன. இதையடுத்து, அதிகாலை 5 மணிக்கு நடராஜா் ஆலமர பிராகாரத்தை வலம் வந்து கோபுரத்தை அடைந்தபின், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில், திருவாலங்காடு ஒன்றியக் குழுத் தலைவா் ஜீவா விஜயராகவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதனிடையே, திருத்தணி அருங்குளம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில், சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. புதன்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் தக்காா் வே.ஜெயசங்கா், கோயில் இணை ஆணையா் நா.பழனிகுமாா் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com