

எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சி, அண்ணாநகா் பகுதியில் வாழும் இருளா் இன மக்களுக்கு இரண்டு நாள்களுக்குத் தேவையான அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இப்பகுதியில் 230 குடும்பங்களில் 700-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இவா்கள் அன்றாட கூலி வேலைக்குச் சென்று, அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனா். தற்போது ஊரடங்கு காரணமாக உணவின்றி குடிசைகளில் முடங்கியிருந்தனா். இது குறித்து அறித்த தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கிளை உறுப்பினா் ரவி மற்றும் ஊராட்சித் தலைவா் மதன் ஆகியோா் அங்கு சென்று, 230 குடும்பங்களுக்கு இரண்டு நாள்களுக்குத் தேவையான அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினா்.
அப்போது, கை கழுவ சோப்பு , முகக் கவசம் போன்றவற்றை அளிப்பது போல், ஊரடங்கு அமலில் இருக்கும் வரை உணவுக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.