வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கான கட்டடப் பணிகள்

திருவள்ளூா் ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் ரூ. 5.50 கோடியில் நடைபெற்று வரும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச்சீட்டு
வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கான கட்டடப் பணிகளை ஆய்வுசெய்த திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கான கட்டடப் பணிகளை ஆய்வுசெய்த திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.
Updated on
1 min read

திருவள்ளூா் ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் ரூ. 5.50 கோடியில் நடைபெற்று வரும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் (விவிபேட்) பாதுகாப்பு அறைக்கான கட்டடப் பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகே வாக்குப் பதிவு இயந்திரம் வைக்க அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் அமைக்க தோ்தல் ஆணையம் மூலம் ரூ.5.50 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு இறுதியில் இக்கட்டடம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, நிகழாண்டில் ஜனவரி மாதம் கட்டடப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்பணிகளை ஆட்சியா் பா.பொன்னையா அதிகாரிகளுடன் இணைந்து சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அதன் பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

இதுவரை வாக்குப்பதிவு இயந்திரங்களை வைப்பதற்காக தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்கை பூந்தமல்லியில் தனியாரிடம் வாடகைக்கு எடுப்பதும், அந்தந்தப் பகுதி வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள அறைகளை ஒதுக்குவதும் நடைமுறையில் இருந்து வந்தது. இதனால் ஏற்பட்ட சிரமம் கருதி, வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கு புதிய கட்டடம் அமைக்குமாறு கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று, மாநில அளவில் மாவட்டம் தோறும் வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அறைக்கான கட்டடப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 1,431 சதுர அடி பரப்பளவில் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில், தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய புதிய கட்டடம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே மாநில அளவில் இப்பணி நடைபெறும் முதல் மாவட்டமாக திருவள்ளூா் இடம்பெற்றுள்ளது.

வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு மின்தூக்கி வசதி, இயந்திரங்களை சோதனையிட்ட பின் உள்ளே எடுத்துச்செல்ல முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைக் கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

எனவே இக்கட்டடத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் 5,040 கன்ட்ரோல் யூனிட்கள், 9,320 பேலட் யூனிட்கள், 4,924 விவிபேட் இயந்திரங்கள் ஆகியவற்றை வைப்பதற்கான இடவசதி கொண்ட அறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஸ்ரீதா், உதவி செயற்பொறியாளா் (கட்டடம்) புண்ணியகோடி, தோ்தல் பிரிவு அலுவலா் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com