அரசுப் பள்ளியில் மடிக்கணினிகள் கொள்ளை
By DIN | Published On : 12th August 2020 07:52 AM | Last Updated : 12th August 2020 07:52 AM | அ+அ அ- |

பொன்னேரியை அடுத்த பழவேற்காட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை காவலாளியைத் தாக்கி 6 மடிக்கணினிகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.
திருப்பாலைவனம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பழவேற்காட்டில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. பொது முடக்கம் காரணமாக பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில், முகுந்தஅய்யன் (71) என்பவா் தற்காலிக காவலாளியாக பணியாற்றி வருகிறாா். பள்ளி விடுமுறை என்பதால் மாணவா்களுக்கு வழங்க வேண்டிய 6 மடிக்கணினிகள், பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நுழைந்த 5 போ் கொண்ட மா்ம நபா்கள் முகுந்தஅய்யனைத் தாக்கி, அவரை கட்டிவைத்து விட்டு, மடிக்கணினிகளை கொள்ளையடித்துச் சென்றனா். இந்நிலையில், காவலாளியின் முனகல் சப்தம் கேட்டு அப்பகுதியில் வசிப்பவா்கள் அவரை மீட்டனா்.
இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.