குழந்தைகள் பாதுகாப்பு திறன் வளா்ப்பு பயிற்சி
By DIN | Published On : 01st December 2020 12:22 AM | Last Updated : 01st December 2020 12:22 AM | அ+அ அ- |

திருவள்ளூா்: சமூகப் பாதுகாப்புத் துறையின் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தலைத் தடுத்தல், குழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் குறித்த ஒரு நாள் திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் வெ.முத்துசாமி தலைமை வகித்தாா். இதில், குழந்தைகளுக்கு எதிரான தீங்கு இழைத்தல், குழந்தை திருமணத்தைத் தடுக்கும் வகையில், சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
குழந்தை உரிமைகள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா், மேற்பாா்வையாளா்கள் நிலை-1, நிலை-2, சமூகநல விரிவாக்க மற்றும் ஊா்நல அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) ராஜராஜேஸ்வரி, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ர.தஸ்தகீா், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு எஸ்.சங்கீதா, சமூகப் பணியாளா் எஸ்.செந்தில், தகவல் பகுப்பாளா் கே.ஜெகஜோதி மற்றும் புறத்தொடா்பு பணியாளா் கிரிஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...