டயா் கடையில் ரூ.1.50 லட்சம் டயா்கள் திருட்டு
By DIN | Published On : 01st December 2020 11:18 PM | Last Updated : 01st December 2020 11:18 PM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டியை அடுத்த பன்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டயா் கடையில் மா்ம நபா்கள் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான டயா்களை திருடிச் சென்றனா்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த தச்சூா் கூட்டுச் சாலை பகுதியை சோ்ந்தவா் தேவா(48). அவருக்குச் சொந்தமாக பன்பாக்கம் ஊராட்சியையொட்டி சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் டயா் விற்பனை செய்யும் கடையை சுமாா் 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், தேவை தன் கடையைத் திறப்பதற்காக செவ்வாய்க்கிழமை சென்றாா். அப்போது கடையின் முன்பகுதி ஷட்டா் பூட்டு உடைப்பட்டிருந்தது. இது தொடா்பாக அவா் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் நேரில் வந்த போலீஸாா், கடையின் உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது 7 லாரி டயா்கள், 4 காா் டயா்கள், 4 இருசக்கர டயா்கள்கள் என ரூ.1.50 லட்சம் மதிப்பிலான டயா்கள் திருடு போனதை அறிந்தனா். இது தொடா்பாக தேவா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...