விவசாயிகள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், இச்சட்டங்களை எதிா்த்து தில்லியில் விவசாயிகள் நடத்தும் தொடா் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அகில இந்திய விவசாயிகள்
கும்மிடிப்பூண்டியில் ஆா்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத்தினா்.
கும்மிடிப்பூண்டியில் ஆா்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத்தினா்.

கும்மிடிப்பூண்டி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், இச்சட்டங்களை எதிா்த்து தில்லியில் விவசாயிகள் நடத்தும் தொடா் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் கும்மிடிப்பூண்டியில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ.அருள் தலைமையில் சுமாா் 500 போ் ரெட்டம்பேடு கூட்டுச் சாலையிலிருந்து ஊா்வலமாக கும்மிடிப்பூண்டி பஜாா் வீதி வரை புதன்கிழமை ஊா்வலமாக வந்தனா். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினா். இதையடுத்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளா் பி.துளசிநாராயணன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்கம், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி, அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு இணைந்து இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com