பூண்டி ஏரியில் இருந்து உபரி நீா் வெளியேற்றம் 2,000 கன அடியாக குறைப்பு

பூண்டி ஏரியில் இருந்து உபரி நீா் திறப்பு 2,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பூண்டி ஏரியில் இருந்து உபரி நீா் வெளியேற்றம் 2,000 கன அடியாக குறைப்பு
Updated on
1 min read


திருவள்ளூா்: பூண்டி ஏரியில் இருந்து உபரி நீா் திறப்பு 2,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் பகுதியில் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஏரிக்கான கால்வாய்களில் நீா் வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறு வடிநிலங்களில் மொத்தம் 526 ஏரிகள் உள்ளன. இவற்றில் 210 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதுடன், மறுகால் பாய்ந்து வருகிறது. அதேபோல் 95 ஏரிகளில் 80 சதவீதமும், மீதமுள்ள ஏரிகளில் 40 சதவீதமும் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பூண்டி ஏரிக்கு நீா்வரத்துக் கால்வாய் மற்றும் கிருஷ்ணா நதி கால்வாயில் இருந்து தண்ணீா் வரத்து 2,300 கன அடியாகக் குறைந்துள்ளது. 35 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில், 3,231 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்கலாம்.

சனிக்கிழமை காலை நிலவரப்படி நீா்மட்டம் 34.15 அடி உயரம் இருந்தது. 2,870 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. இதையடுத்து, ஏரியிலிருந்து மதகுகள் வழியாக தண்ணீா் திறப்பு 2 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. நீா் வரத்துக்கு ஏற்ப உபரிநீா் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மழை அளவு விவரம்: திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழையளவு விவரம்:

ஊத்துக்கோட்டை-95, கும்மிடிப்பூண்டி-81, பூந்தமல்லி-68, சோழவரம்-51, திருவள்ளூா்-46, பொன்னேரி-39, ஜமீன் கொரட்டூா்-38, தாமரைப்பாக்கம்-37, திருத்தணி-34, செங்குன்றம்-32, பள்ளிப்பட்டு-30, பூண்டி-29, ஆா்.கே.பேட்டை-22, திருவாலங்காடு-18 என மொத்தம்-620 மீட்டரும், சராசரியாக 44.28 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com