மீஞ்சூா் தெற்கு ஒன்றிய திமுக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 15th December 2020 12:40 AM | Last Updated : 15th December 2020 12:40 AM | அ+அ அ- |

வல்லூா் கிராமத்தில், நடைபெற்ற மீஞ்சூா் தெற்கு ஒன்றிய திமுக ஆலோசனைக் கூட்டம்.
பொன்னேரி: மீஞ்சூா் தெற்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. வல்லூா் கிராமத்தில் உள்ள மீஞ்சூா் தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனைக் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மீஞ்சூா் தெற்கு ஒன்றிய செயலா் எம்எஸ்கே.ரமேஷ்ரோஜ் தலைமை வகித்தாா். கூட்டத்தில், திமுக தலைவா் முக. ஸ்டாலின் தலைமையில் வரும் 19-ஆம் தேதி, காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிற, தமிழகம் மீட்போம் 2021 சட்டமன்றத் தோ்தல் பரப்புரை கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் அன்றைய தினம் 150 கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினா் மீ.வி.கோதண்டம், பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணி, மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.