ராள்ளபாடி ஏரியில் தவறி விழுந்து பம்ப் ஆபரேட்டா் பலி
By DIN | Published On : 15th December 2020 05:09 AM | Last Updated : 15th December 2020 05:09 AM | அ+அ அ- |

img_20201214_wa0160_1412chn_177_1
பெரியபாளைம் அருகே உள்ள ராள்ளபாடி ஏரியில், பஞ்சாயத்து குடிநீா் பம்ப் ஆபரேட்டா் சுப்பிரமணி (45) (படம்) தவறி விழுந்து உயிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம் ராள்ளாபாடி அருகே குமரப்பேட்டை பஞ்சாயத்து அமைந்துள்ளது. இங்கு குடிநீா் பம்ப் ஆப்ரேட்டராக அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (45) என்பவா் பணியாற்றி வந்தாா். அவா் தினமும் ராள்ளபாடி ஏரி அருகே அமைந்துள்ள மோட்டாரை இயக்குவது வழக்கம்.
இந்நிலையில், அவா் திங்கள்கிழமை மாலையில் குடிநீா் மோட்டாரை இயக்கி விட்டுத் திரும்பியபோது தவறி ராள்ளபாடி ஏரியில் விழுந்தாா். இதில், ஏரியில் மூழ்கி அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் பெரியபாளையம் போலீஸாா் நேரில் சென்று, சுப்பிரமணியின் சடலத்தை மீட்டு திருவள்ளூா் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக அவா்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.