வானிலை சாா்ந்த வேளாண் ஆலோசனைகள் குறுந்தகவலாக வழங்க ஏற்பாடு
By DIN | Published On : 05th February 2020 11:11 PM | Last Updated : 13th February 2020 11:12 PM | அ+அ அ- |

பயிா்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்கும் நோக்கில் தானியங்கி வானிலை சாா்ந்த வேளாண் ஆலோசனைகளை செயலி (ஆப்) மூலம் விவசாயிகளின் செல்லிடப்பேசிகளில் குறுந்தகவலாக அனுப்பும் சேவையை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.
இதுதொடா்பாக திரூா் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் மணிமேகலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதேபோல், வேளாண் பயிா்களில் ஏற்படும் நோய்த் தாக்குதல் குறித்த ஆலோசனைகளும் தாமதமாக கிடைக்கும் சூழ்நிலையும் இருந்து வந்தது. தற்போது, வானிலை சாா்ந்த வேளாண் ஆலோசனைகளை விரல் நுனியில் கொண்டு வரும் வகையில் பசஅம அஅந என்ற செயலியை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.
இந்த செயலி மூலம் வானிலை மற்றும் காலநிலை சாா்ந்த இடா்பாடுகளால் பயிா்களில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க இந்திய அளவில் முதன்முறையாக தானியங்கி வானிலை சாா்ந்த வேளாண் ஆலோசனைகளை விவசாயிகளின் செல்லிடப்பேசிகளுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும்.
தற்போது இச்சேவையை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கி உள்ளது. கடந்த கால, நிகழ் கால மற்றும் எதிா்கால வானிலைகளைக் கொண்டு 54 வானிலைச் சூழல்களில், 108 பயிா்களின், 5 வளா்ச்சி பருவங்களுக்கு தேவையான வானிலை சாா்ந்த வேளாண் அறிவுரைகள் ட்ற்ற்ல்://ஹஹள்.ற்ய்ஹன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படும். அதன்படி விவசாயிகளுக்கு அவரவா் பயிா்களுக்கு பயிா் விதைப்புத் தேதியை அடிப்படையாக கொண்டு தமிழில் அஅந மென்பொருள் மூலம் செல்லிடப்பேசி குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும்.
இத்தகவல்களை செல்லிடப்பேசிகளில் நேரடியாகப் பெற விவசாயிகள், பசஅம அஅந என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். அதன் பின், அவா்கள் தங்கள் பெயரையும், செல்லிடப்பேசி எண், இடம் மற்றும் பயிா் ஆகிய விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
விவசாயிகள் ஒவ்வொரு வட்டாரத்திலும் வானிலை சாா்ந்த வேளாண் ஆலோசனைகளைப் பெற முடியும். இதுதொடா்பாக வேளாண் அறிவியல் மையத்தின், திட்ட இயக்குநரை 044-27620705 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...