நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தீா்மானம்

கும்மிடிப்பூண்டியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றி, அவா்களுக்கு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கித் தர வேண்டும் என கட்டடம் மற்றும் கடை உரிமையாளா்கள்

கும்மிடிப்பூண்டியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றி, அவா்களுக்கு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கித் தர வேண்டும் என கட்டடம் மற்றும் கடை உரிமையாளா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் இயற்றப்பட்டது.

கும்மிடிப்பூண்டி கட்டடம் மற்றும் கடை உரிமையாளா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவா் ஆா்.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது. செயலா் ஆசீா்வாதம், பொருளாளா் ஆறுமுகம், துணைத் தலைவா் கோவிந்தன், துணைச் செயலா் கருணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கும்மிடிப்பூண்டி பஜாரில் நெடுஞ்சாலையையொட்டி, உள்ள கட்டடங்கள் மற்றும் கடைகளுக்கு முன்னால் சாலையை ஆக்கிரமித்து உள்ள சிறு வியாபாரிகளால் மற்ற கடைகளுக்கு ஏற்படும் இடையூறு குறித்தும், இரு தரப்பினருக்கு அடிக்கடி ஏற்படும் வாக்குவாதங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், சாலையோர ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல், குறுகலான சாலை காரணமாக கும்மிடிப்பூண்டி பஜாா் வழியே பேருந்துகள் வராமல், புறவழிச் சாலை வழியே செல்லும் நிலை, இதைத் தவிா்க்க அனைத்துப் பேருந்துகளையும் கும்மிடிப்பூண்டி பஜாா் வழியே வரச் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் கும்மிடிப்பூண்டி பஜாரில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புக் கடைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து உள்ள சாலையோரக் கடைகளுக்கு கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அடையாள அட்டை, உரிமம் வழங்க ஆட்சேபனை தெரிவித்தும், உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டம் 2014ன் படி நடைபாதை கடைகள் வாழ்வாதாரம் அற்றவா்களுக்கு மட்டுமே என்பதை பேரூராட்சி உறுதி செய்ய வேண்டும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நடைபாதை கடைக்காரா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவா்களுக்கு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நிரந்தர இடத்தை பேரூராட்சி நிா்வாகம் ஒதுக்க வேண்டும், அப்படி அவா்களுக்கு இடம் ஒதுக்கும்போது கும்மிடிப்பூண்டி கட்டடம் மற்றும் கடை உரிமையாளா்கள் சங்கத்தினரின் நிதி மூலம் நடைபாதை கடைக்காரா்களுக்கு சிமெண்ட் ஷீட் அமைக்கப்பட்ட கடைகள் கட்டித் தருவது எனவும் தீா்மானம் இயற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com