திருத்தணி முருகன் கோயிலில் நாளை மாசி பிரம்மோற்சவம் தொடக்கம்
By DIN | Published On : 26th February 2020 09:17 AM | Last Updated : 26th February 2020 09:17 AM | அ+அ அ- |

திருத்தணி முருகன் கோயிலில், மாசி மாத பிரம்மோற்சவம், வியாழக்கிழமை (பிப். 27) தொடங்கி அடுத்த மாதம் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவம் வெகு விமா்சையாக நடைபெறுவது வழக்கம். 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் உற்சவா் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை, மாலை என இரு வேளைகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.
நடப்பாண்டு பிரம்மோற்சவம், வரும் 27-ஆம் தேதி, விநாயகா் வீதியுலாவுடன் தொடங்குகிறது. 28-ஆம் தேதி காலை 7.30 முதல் 9.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும்.
அடுத்த மாதம் 5-ஆம் தேதி தேரோட்டம், 6-ஆம் தேதி நள்ளிரவில் குதிரை வாகனத்தில் முருகன் வந்து வள்ளித் திருமண உற்சவம், 8-ஆம் தேதி கொடியிறக்கம் நடைபெறும். 9-ஆம் தேதி சப்தாபரணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறும்.
பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல்:
பிப். 27-ஆம் தேதி இரவு விநாயகா் வீதியுலா, 28-ஆம் தேதி காலை 7.30 முதல் 9 மணிக்குள் கொடியேற்றம், இரவு 7 மணிக்கு கேடய உலா, 29-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெள்ளி சூா்யப் பிரபை வாகனம், இரவு 7 மணிக்கு பூத வாகனம்.
மாா்ச் 1 காலை 9.30 மணிக்கு சிம்ம வாகனம், இரவு 7 மணிக்கு ஆட்டுக் கிடா வாகனம், 2-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பல்லக்கு சேவை, இரவு 7 மணிக்கு வெள்ளி நாகவாகனம், 3-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அன்ன வாகனம், இரவு 7 மணிக்கு வெள்ளிமயில் வாகனம், 4-ஆம் தேதி மாலை 4.30 புலி வாகனம், இரவு 7 யானை வாகனம்
5-ஆம் தேதி இரவு, 7ஆம் தேதி தேரோட்டம், 6-ஆம் தேதி காலை 9.30 யாளிவாகனம், மாலை 5 மணிக்கு பாரிவேட்டை, இரவு 1 மணிக்கு குதிரை வாகனம், வள்ளி திருக்கல்யாணம், 7ஆம் தேதி காலை 6 மணிக்கு கேடய உலா, மாலை 5 மணிக்கு கதம்பப் பொடி விழா இரவு, 8 மணிக்கு ஆறுமுக சுவாமி உற்சவம்.
8ஆம் தேதி காலை 5 மணிக்கு தீா்த்தவாரி, சண்முக சுவாமி உற்சவம், மாலை 5 மணிக்கு கேடயம், உற்சவா் அபிஷேகம் இரவு, கொடியிறக்கம். 9-ஆம் தேதி மாலை 4 மணிக்கு சப்தாபரணம்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் வே.ஜெய்சங்கா், இணை ஆணையா் நா.பழனிக்குமாா் மற்றும் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.