திருவள்ளூா் அருகே ரூ. 42.50 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு

திருவள்ளூா் அருகே திருநின்றவூா் பேரூராட்சியில் புதிதாக ரூ. 42.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை பொதுமக்களின்
திருவள்ளூா் அருகே ரூ. 42.50 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு

திருவள்ளூா் அருகே திருநின்றவூா் பேரூராட்சியில் புதிதாக ரூ. 42.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தமிழ் வளா்ச்சி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன், ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் ஆகியோா் திறந்து வைத்தனா்.

திருவள்ளூா் அருகே திருநின்றவூா் பேரூராட்சியில் 3 பேருந்துகள் நிற்கும் வகையில் மட்டுமே பேருந்து நிலையம் இருந்தது. அதிலும், பேருந்து ஏறிச் செல்லும் பயணிகளுக்கு போதிய நிழற்குடை இல்லாமல் இருந்தது. இதனால் திருநின்றவூரில் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். அதனை ஏற்று, அப்போதைய திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி மற்றும் ஆவடி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 42.50 லட்சத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பணிகள் நடைபெற்று மு டிந்தது.

திருநின்றவூரில் புதிதாக அமைக்கப்பட்ட இப்பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. தமிழ் ஆட்சி மொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் மற்றும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் ஆகியோா் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, அரசுப் பேருந்தை கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com