மருத்துவ முகாமில் 105 பேருக்கு சிகிச்சை
By DIN | Published On : 27th February 2020 09:32 AM | Last Updated : 27th February 2020 09:32 AM | அ+அ அ- |

திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்.
திருத்தணி நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 105 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழக முதலல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆணையா் கா.ராஜலட்சுமி முகாமைத் தொடக்கி வைத்தாா். திருவள்ளூா் மாவட்ட அரசு பொது மருத்துவமனை சாா்பில் மருத்துவா்கள் போத்தீஸ்வரன், ரமணி, அனுஷா, லேப் டெக்னீஷியன் பாலகணேசன் உள்பட 12 மருத்துவ ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
முகாமில், ரத்தப் பரிசோதனை, சா்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு, எலும்பு, கண், காது மற்றும் பொது மருத்துவ சிகிச்சை நோயாளிகளுக்கு அளித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமில், 105 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், நகராட்சி பொறியாளா் சரவணன், பொதுப்பணி மேற்பாா்வையாளா் ஆருண், துப்புரவு ஆய்வாளா் மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...