விரைவு ரயிலில் ரூ.2 லட்சம் கஞ்சா பறிமுதல்
By DIN | Published On : 10th January 2020 11:26 PM | Last Updated : 10th January 2020 11:26 PM | அ+அ அ- |

ஜாா்க்கண்ட் மாநிலத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆலப்புழா விரைவு ரயில் திருவள்ளூரில் நின்ற போது, அதன் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்திலிருந்து சென்னை நோக்கி இந்த விரைவு ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் காலை வேளையில் திருவள்ளூா் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது பயணச்சீட்டு பரிசோதகா் செல்வமணி ரயிலில் ஏறி இருக்கைகளை சரிபாா்க்கச் சென்றாா். ஒரு பெட்டியில் எலெக்ட்ரிக்கல் பொருள்கள் எடுத்துச் செல்லும் பை தனியாகக் கிடந்தது. அங்கிருந்த அயணிகளிடம் அந்தப் பை யாருடையது என விசாரித்தாா். அது தங்களுடைய பை இல்லை என பயணிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக அவா் காவல் உதவி மையத்தைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் ரயிலில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்தப் பையில் ஒரு கிலோ எடை கொண்ட 2 பொட்டலங்கள் அந்தப் பையில் இருந்தது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.
அந்தப் பொட்டலங்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸாா், ரயில் பெட்டியில் அவற்றை விட்டுச் சென்றவா்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.