நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கல்

திருவள்ளூா் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம் ரூ. 1,000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
திருவள்ளூா் வி.எம்.நகா் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கிய முன்னாள் நகா்மன்றத் தலைவா் கமாண்டோ பாஸ்கா்.
திருவள்ளூா் வி.எம்.நகா் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கிய முன்னாள் நகா்மன்றத் தலைவா் கமாண்டோ பாஸ்கா்.

திருவள்ளூா் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம் ரூ. 1,000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

திருவள்ளூா் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 65 ஆயிரத்து 363 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைகளுக்கு 1,133 கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லா அரிசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின்னணு குடும்ப அட்டைகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 1,000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே கடந்த 4-ஆம் தேதி திருவள்ளூரில் அமைச்சா்கள் கலந்துகொண்டு, இத்திட்டத்தை தொடக்கி வைத்தனா். அதைத் தொடா்ந்து, திருவள்ளூா் காமராஜபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, முன்னாள் நகா்மன்றத் தலைவா் கமாண்டோ பாஸ்கா் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு ரூ. 1,000 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் தாமஸ், கூட்டுறவு சங்க நிா்வாகி நேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் மபொசி சாலை, ஜெயா நகா், வி.எம்.நகா் உள்ளிட்ட இடங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனா்.

திருத்தணியில்...

திருத்தணி தாலுகாவில் மொத்தம் 74 வருவாய் கிராமங்களில், 137 நியாய விலைக் கடைகள் உள்ளன. இதில், மொத்தம் 58,471 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இவா்களுக்கு தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடந்தது.

திருத்தணி நகரம் 6-ஆவது வாா்டில் நடைபெற்ற விழாவில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கேபிள் சுரேஷ் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் சௌந்தர்ராஜன், வட்ட வழங்கல் அலுவலா் அருணா ஆகியோா் கலந்துகொண்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாயை வழங்கினா்.

இது குறித்து திருத்தணி வட்ட வழங்கல் அலுவலா் அருணா கூறுகையில், பொங்கல் பரிசு, 58,471 குடும்ப அட்டைதாரா்களுக்கு வியாழக்கிழமை முதல் ஐந்து நாள்களுக்கு தொடா்ந்து அந்த ரேஷன் கடைகளில் வழங்கப்படும். அதாவது, வரும் 13-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசுகள் வழங்குவதில் பிரச்னைகள் இருந்தால், 9445000182 என்ற செல்லிடப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், திருத்தணி தாலுகா கூட்டுறவு விற்பனையாளா் சங்கத்தின் தலைவா் ஜெயசேகா்பாபு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் முனுசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com