பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டிகள்

இந்தியாவின் பொருளதார வளா்ச்சி குறித்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கட்டுரை, ஓவியப் போட்டிகளில் 80-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.
திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கட்டுரை, ஓவியப் போட்டிகளில் பங்கேற்ற மாணவா்கள்.

திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், திருத்தணி கல்வி மாவட்டத்தில் உள்ள உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இடையே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலின் மூலம் இந்தியாவின் பொருளதார வளா்ச்சி குறித்து கட்டுரை மற்றும் ஒவியப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், திருத்தணி, ஆா்.கே.பேட்டை, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த 15 பள்ளிகளில் இருந்து, 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ-மாணவியா் என மொத்தம் 85 போ் பங்கேற்றனா். இப்போட்டிகளை திருத்தணி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளா் வெங்கடேசுலு கலந்துகொண்டு தொடக்கி வைத்தாா்.

இதில், சிறந்த கட்டுரை மற்றும் ஓவியம் வரைந்த முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவியருக்கு பரிசுகள் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com