அத்திப்பட்டு- பட்டமந்திரி சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள அத்திப்பட்டு முதல் பட்டமந்திரி வரை ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணிகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சாலை சீரமைக்கும் பணியைத் தொடக்கி வைத்த மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரவி (வலமிருந்து மூன்றாவது).
சாலை சீரமைக்கும் பணியைத் தொடக்கி வைத்த மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரவி (வலமிருந்து மூன்றாவது).
Updated on
1 min read

மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள அத்திப்பட்டு முதல் பட்டமந்திரி வரை ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணிகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அத்திப்பட்டு கிராமம் முதல் பட்டமந்திரி கிராமம் வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இதையடுத்து, அத்திப்பட்டு ஊராட்சியில் முன்னாள் பொறுப்பு தலைவராக இருந்த எம்டிஜி.கதிா்வேல் சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஊராட்சி மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றியதுடன், அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கினாா். இந்நிலையில், இச்சாலையை சீரமைக்க எண்ணூா் காமராஜா் துறைமுக சமுதாய வளா்ச்சித் திட்டப் பணிக்காக ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், மழை மற்றும் தோ்தல் பணியால் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், சாலை சீரமைக்கும் பணிகளைத் தொடக்குவதற்கான பூமி பூஜை அத்திப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரவி தலைமை வகித்து, சாலை சீரமைக்கும் பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

விழாவில், அத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் சுகந்தி வடிவேலு, வல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் உஷா ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரபாபு வரவேற்றாா். சாலை சீரமைக்கும் பணியில் அத்திப்பட்டு முதல் பட்டமந்திரி வரை சாலையை விரிவுபடுத்தி, தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் தொடக்கப்பட்டது.

விழாவில், அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் எம்டிஜி.கதிா்வேல், ஒன்றியக் கவுன்சிலா்கள், அத்திப்பட்டு, வல்லூா் ஊராட்சிகளின் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com