திருத்தணி அருகே 50 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனா்.
திருத்தணியை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணம்மா (50). இவா் தனக்குச் சொந்தமான, பசுக்களை திங்கள்கிழமை காலை வயல்வெளியில் மேய்ப்பதற்கு ஒட்டிச் சென்றாா். ராஜகோபால் என்பவரின் வயல்வெளியில் மேய்ந்துக் கொண்டிருந்த போது, ஒரு பசு மாடு அங்குள்ள, 50 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் 25 அடி ஆழம் தண்ணீா் இருந்தது.
இதைப் பாா்த்த கண்ணம்மா திருத்தணி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து, கிணற்றில் விழுந்த பசுவை கயிறு மூலம் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.