கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 21st July 2020 11:22 AM | Last Updated : 21st July 2020 11:22 AM | அ+அ அ- |

முறையற்ற மின் கட்டண உயர்வு மற்றும் மின் கட்டணம் கட்ட கால நீட்டிப்பை உயர்த்த கோரி திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் அவரவர் வீடுகளில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு தலைமையில் திமுகவினர் நடத்திய கருப்புக்கொடி ஆர்பாட்டத்திற்கு மாவட்ட பிரதிநிதி மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர் ஜோதி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் சரண்ராஜ், மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் ஆகாஷ், கோட்டக்கரை கிருஷ்ணன், பன்பாக்கம் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கோளூர் பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையிlலும்,கவரப்பேட்டையில் கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் நமச்சிவாயம்,திமுக ஒன்றிய துணை செயலாளர் திருமலை, ஒன்றிய கவுன்சிலர் இந்திரா தனலட்சுமி, முன்னாள் ஒன்றிய இளைஞணி அமைப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் திமுகவினர் கருப்பு கொடி ஆர்பாட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன் தலைமையில் ஆரம்பாக்கத்திலும், ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் மாலதி முரளி தலைமையிலும், திமுகவினர் கருப்பு கொடி ஆர்பாட்டம் நடத்தினர். மாநெல்லூரில் பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன் தலைமையிலும், நேமள்ளூரில் மாவட்ட இலக்கிய அணி புரவலர் மனோகரன் தலைமையிலும், கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கோட்டக்கரையில் ஒன்றிய பிரதிநி கருணாகரன் தலைமையிலும் திமுகவினர் கருப்பு கொடி ஆர்பாட்டம் நடத்தினர்.