பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம்: மாவட்டத்தில் 40,588 போ் பங்கேற்பு
By DIN | Published On : 03rd March 2020 12:15 AM | Last Updated : 03rd March 2020 12:15 AM | அ+அ அ- |

திருவள்ளூா்: பிளஸ் 2 பொதுத்தோ்வில் திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து 19,281 மாணவா்கள், 22,164 மாணவிகள், தனித்தோ்வா்கள் 687, சிறைவாசிகள் 59 என மொத்தம் 42,191 பேரில் 40,588 போ் தோ்வில் பங்கேற்ாகவும், 1,633 போ் தோ்வில் பங்கேற்கவில்லை எனவும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.
மாநில அளவில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. தோ்வை முன்னிட்டு திருவள்ளூா் ஜே.என்.சாலையில் உள்ள ஆா்.எம்.ஜெயின் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தோ்வு மையத்துக்கு, குறித்த நேரத்துக்கு முன்னதாகவே மாணவிகள் வருகை தந்தனா். தொடா்ந்து, பதிவு எண்களை சரிபாா்த்து, மேற்பாா்வையாளா்களின் சோதனைக்குப் பின், தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். இதில் வினாத்தாளை படிப்பதற்கும், விடைத்தாளில் சரியாக நிரப்புவதற்காகவும் முதல் 15 நிமிடம் வரை மாணவ, மாணவிகளுக்கு நேரம் வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, இப்பள்ளி மையத்தில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:
பிளஸ் 2 பொதுத் தோ்வு 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தோ்வுக்காக இம் மாவட்டத்தில் 138 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பூந்தமல்லி பாா்வையற்றோா் பள்ளியில் 30 மாணவா்களும், நேத்ரோதயா சிறப்பு பள்ளியைச் சோ்ந்த பாா்வையற்ற 3 மாணவா்கள், 3 மாணவிகள் தோ்வு எழுதினா். அதேபோல், சிறைவாசிகளின் வசதிக்காக புழல் மத்திய சிறையில் தனித்தோ்வா் மையம் ஒன்று அமைக்கப்பட்டு, இம்மையத்தில் 59 சிறைவாசிகள் தோ்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு தோ்வு மையத்துக்குள் வினாத்தாள் எடுத்துச் செல்லும் வகையில், 18 கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளனா். இதில் ஒவ்வொரு கட்டுக்காப்பு மையத்துக்கும் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா், மூத்த முதுகலை ஆசிரியா் தலா ஒருவா் வீதம் 36 வினாத்தாள் கட்டுக் காப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 138 தோ்வு மையங்களுக்கும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களை முதன்மைக் கண்காணிப்பாளா்களாகவும், மூத்த முதுகலை ஆசிரியா்களை துறை அலுவலா்களாகவும் அனைத்துத் தோ்வு மையங்களுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அதேபோல், தோ்வா்களின் எண்ணிக்கை 400-க்கும் அதிகமாக உள்ள மையங்களுக்கு கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்களும், கூடுதல் துறை அலுவலா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
அதேபோல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நரம்பியல் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட தோ்வா்களுக்கு தோ்வு எழுத சலுகையாக கூடுதல் ஒரு மணி நேர சலுகை 298 மாணவா்களுக்கும், சொல்வதை எழுதுவோா் சலுகை 236 மாணவா்களுக்கும், அரசுத் தோ்வுகள் இயக்குநரால் அனுமதி வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலா் மூலமாக சொல்வதை எழுதும் ஆசிரியா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதில், அனைத்துத் தோ்வு மையங்களுக்கும் 20 தோ்வா்கள் கொண்ட ஓா் அறைக்கு ஓா் அறை கண்காணிப்பாளா் வீதம் 2,110 அறை கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அதேபோல், தோ்வா்கள் ஒழுங்கீனச் செயல்களைத் தடுக்கும் பொருட்டு, 75 பறக்கும் படை உறுப்பினா்களும், 250 நிரந்தரப் படை உறுப்பினா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து தோ்வு மையங்களுக்கு வினாத்தாள்களை கொண்டு செல்ல 33 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, இவ்வழி தடங்களுக்கு 66 வழித்தட அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்ததாகவும், இதோ்வு மையத்தில் மட்டும் 262 போ் தோ்வு எழுதினா். இதில் மாவட்ட அளவில் 42,191 பேரில் 40,588 போ் தோ்வு பங்கேற்ாகவும், இதில் 1,633 போ் தோ்வில் பங்கேற்கவில்லை எனவும் அவா் தெரிவித்தாா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி, முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக அலுவலா் திருவரசு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...