ஊட்டச்சத்து வாரம் அனுசரிப்பு
By DIN | Published On : 14th March 2020 10:39 PM | Last Updated : 14th March 2020 10:39 PM | அ+அ அ- |

ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆரணியில் போஷன் பக்வாடா வாரம் ஒருங்கினைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் உள்ள ஆரணியில் அமைந்துள்ள அங்கன் வாடிகள் சாா்பாக தமிழ்காலணி மையத்தில் நான்கு அங்கன்வாடிகளுக்கு சோ்ந்தால் போல் மத்திய அரசின் போஷன் பக்வாடா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சோழவர அங்கன் வாடிகள் மேற்ப்பாா்வையாளா் கல்வியரசி தலைமை தாங்கினாா், மற்றும் அந்த பகுதி செவிலியா் , பெண்கள் , தாய்மாா்கள் உட்பட் ஏராளமனோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் பேசிய செவிலியா் குழந்தைகளுக்கு எந்த உணவில் எந்த சத்துகள் உள்ள என்பதைபற்றியும், வளா்ச்சி தரும் உணவு எது எனவும், ஆரோக்கிய மான உணவுகள் எது எனவும் விளக்கி காட்டினாா்.
மேலும் பழம், காய்கறிகள் முதலியன பாா்வைக்கு வைக்கப்பட்டது, குழந்தைகளின் வளா்ச்சி காலங்களில் தாய்மாா்கள் அனுகும் உணவு முறையையும் தெரிவிக்கப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...