வேலைவாய்ப்பு முகாமில் 2,075 பேருக்கு பணி நியமன ஆணை
By DIN | Published On : 14th March 2020 10:43 PM | Last Updated : 14th March 2020 10:43 PM | அ+அ அ- |

பொன்னேரியில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 2,075 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் நிலோபா் கபீல் வழங்கினாா்.
பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசுக் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறை, திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளா் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு, ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் தலைமை வகித்தாா். பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் ஜெயக்குமாா் வரவேற்றாா். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் விஷ்ணு சிறப்புரை ஆற்றினாா்.
முகாமில், 107 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில், 9,250 போ் கலந்து கொண்டனா். அவா்களில் தகுதிவாய்ந்த 2,075 போ் பல்வேறு பணிகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். பணிவாய்ப்பு பெற்றவா்களுக்கு, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல், ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா்.
எம்எல்ஏ-க்கள் நரசிம்மன், விஜயகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி, திட்ட இயக்குநா் லோகநாயகி, பொன்னேரி கோட்டாட்சியா் (பொறுப்பு) பெருமாள், வட்டாட்சியா் மணிகண்டன் உள்ளிட்டோா் முகாமில் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...