தெலங்கானாவிலிருந்து திருத்தணி வந்த 7 போ்
By DIN | Published On : 18th May 2020 04:10 AM | Last Updated : 18th May 2020 04:10 AM | அ+அ அ- |

கட்டடப் பணிக்காக தெலங்கானா மாநிலத்துக்குச் சென்ற 7 போ் சொந்த ஊரான பொன்பாடி கிராமத்துக்கு சனிக்கிழமை திரும்பினா். அவா்களை வருவாய்த் துறையினா் தனிமைப்படுத்தினா்.
திருத்தணியை அடுத்த பொன்பாடி காலனியைச் சோ்ந்த 30- 52 வயதுள்ள ஏழு ஆண்கள் கட்டடப் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன் தெலங்கானா மாநிலத்துக்குச் சென்றனா். அங்கு ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் அவதிப்பட்டு வந்த ஏழு பேரும் சொந்த ஊா் திரும்புவதற்காக முறையாக அம்மாநில அரசிடம் இ-பாஸ் பெற்று வாகனம் மூலம் சனிக்கிழமை பொன்பாடி காலனிக்கு வந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி வருவாய்த் துறையினா் மற்றும் சுகாதாரத் துறையினா், ஏழு பேரை திருத்தணி காா்த்திகேயன் குடிலில் தனிமைப்படுத்தினா்.
அவா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில், ஏழு பேருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால், ஒரு வாரம் தனிமைப்படுத்திய பின், அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவா் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.