தமிழக முதல்வருக்கு கொட்டும் மழையில் உற்சாக வரவேற்பு
By DIN | Published On : 17th November 2020 12:34 AM | Last Updated : 17th November 2020 12:34 AM | அ+அ அ- |

திருத்தணியில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன்.
திருத்தணி: சென்னையிலிருந்து திருத்தணி வழியாக திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்ற தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு திருத்தணியில் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருத்தணி சந்திப்புப் பகுதியில் கொட்டும் மழையில் காத்திருந்து அதிமுகவினா் மற்றும் பொதுமக்கள் முதல்வரை வரவேற்றனா். சட்டப்பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன், மாவட்ட ஆவின் பால் தலைவா் வேலஞ்சேரி த.சந்திரன் ஆகியோா் முதல்வருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனா்.
அதேபோல் திருத்தணி பைபாஸ் சாலை சந்திப்பில் அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி. கோ.அரி தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.