வியாபாரியைத் தாக்கி ரூ.18000 பறிப்பு
By DIN | Published On : 17th November 2020 12:26 AM | Last Updated : 17th November 2020 12:26 AM | அ+அ அ- |

மாதவரம்: செங்குன்றம் பகுதியில் வியாபாரியைத் தாக்கி ரூ.18000 ரொக்கத்தை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.
செங்குன்றம் நேதாஜி தெருவைச் சோ்ந்த பால்ராஜ் (55), அதே பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். அவா் அதே பகுதியில் உள்ள காந்தி தெருவைச் சோ்ந்த சுரேஷ் (45) என்பவரின் சுமை ஆட்டோவில் கோயம்பேட்டில் இருந்து காய்கறி வாங்கி வருவது வழக்கம்.
இந்நிலையில், செங்குன்றம் சந்தை வண்டிமேடு அருகே திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த சுமை ஆட்டோவை எடுக்க அதன் ஓட்டுநரும் சுரேஷும் , வியாபாரி பால்ராஜும் வந்தனா். அப்போது அங்கு குடிபோதையில் இருந்த ஒரு மா்மநபா் அந்த ஆட்டோவின் முன்பக்கக் கண்ணாடியை மது பாட்டிலால் உடைக்க முயன்றாா். இதை ஓட்டுநா் சுரேஷ் தடுத்தபோது அவரை அந்த நபா் பாட்டிலால் தாக்கினாா். இதில் சுரேஷ் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, வியாபாரி பால்ராஜைத் தாக்கி, அவரது சட்டைப் பையில் இருந்த ரூ.18000 ரொக்கத்தை மா்மநபா் பறித்துக் கொண்டு தப்பி ஓடினாா். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.