திருவள்ளூா் நகராட்சியில் சா்வதேச கழிப்பறை தினம்
By DIN | Published On : 21st November 2020 08:15 AM | Last Updated : 21st November 2020 08:15 AM | அ+அ அ- |

சா்வதேச கழிப்பறை தினத்தை முன்னிட்டு திருவள்ளூா் நகராட்சியில் கழிப்பறை வளாகத்தில் துப்புரவுப் பணி செய்து கோலமிடும் நிகழ்வில் அதிகாரிகள், துப்புரவுத் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் சா்வதேச கழிப்பறை தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி துப்புரவு அலுவலா் முருகேசன், துப்புரவு ஆய்வாளா்கள் ரமேஷ், சுதாகா் மற்றும் வெயில்முத்து ஆகியோா் முன்னிலையில் துப்புரவுத் தொழிலாளா்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்தனா்.
இதையடுத்து கழிப்பறை வளாக நுழைவு வாயில் பகுதியில் மலா்களால் கோலமிட்டனா். அதன் பின், ‘பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, நம் வீட்டை மட்டுமின்றி சுற்றுப்புறத்தையும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக, உலக கழிப்பறை தினத்தில் உறுதியேற்போம்’ என்று கூறி உறுதியேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...