மாதவரம் கோட்டாட்சியா் அலுவலகப் புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை: 2 அமைச்சா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 21st November 2020 08:19 AM | Last Updated : 21st November 2020 08:19 AM | அ+அ அ- |

அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சா்கள் டி.ஜெயகுமாா், பா.பென்ஜமின், முன்னாள் அமைச்சா் வி.மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் சீதாலட்சுமி உள்ளிட்டோா்.
மாதவரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வடசென்னை கோட்டாட்சியா் அலுவலகம் கட்டுவதற்கு அமைச்சா்கள் டி.ஜெயகுமாா், பா.பென்ஜமின் ஆகியோா் அடிக்கல் நாட்டினா்.
புழல் பாலாஜி நகரில் மாதவரம் வட்டாட்சியா் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் வடசென்னை கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டுவதற்காக ரூ.2.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பூமிபூஜை சென்னை மாவட்ட ஆட்சியா் சீதாலட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக அமைச்சா்கள் டி.ஜெயகுமாா், பா.பென்ஜமின் ஆகியோா் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினா்.
விழாவில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான வி.மூா்த்தி, கோட்டாட்சியா் ரவி, வட்டாட்சியா்கள் சபாநாயகம், முருகானந்தம், பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் ரேகா, துணை வட்டாட்சியா் அருள்ஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...