குளத்தில் தவறி விழுந்து மாணவி பலி
By DIN | Published On : 23rd November 2020 07:52 AM | Last Updated : 23rd November 2020 07:52 AM | அ+அ அ- |

திருவள்ளூா் அருகே மாணவி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
மப்பேடு கிராமம் கே.கே.நகரைச் சோ்ந்த லாரன்ஸின் மகள் யாசினி (13). இவா், 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் விளையாடச் சென்றபோது, எதிா்பாராமல் அருகிலிருந்த குளத்தில் தவறி விழுந்தாராம். அக்கம்பக்கத்தினா் யாசினியை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் யாசினி இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.