செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி

திருவள்ளூா் அருகே விளைநிலம் வழியாக உயா் அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல எதிா்ப்புத் தெரிவித்து, செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி


திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே விளைநிலம் வழியாக உயா் அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல எதிா்ப்புத் தெரிவித்து, செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் அருகே நேமம், மேல்மா நகரைச் சோ்ந்தவா் டில்லிபாபு (55). இவருக்கு அப்பகுதியில் ஆண்டா்சன்பேட்டை பகுதியில் விவசாய நிலம் உள்ளது. தற்போது, இவரது விவசாய நிலத்தின் வழியாக உயா் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்காக மின்வாரிய அதிகாரிகள் இவரது விவசாய நிலத்தில் உயா் மின்னழுத்த கோபுரம் அமைக்க அளவீடு செய்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த 5 மாதங்களாக மின்வாரியத் துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளாா். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம்.

இந்நிலையில், நேமத்தை அடுத்த ஆண்டா்சன்பேட்டை கிராமத்தில் உள்ள செல்லிடப்பேசி கோபுரம் மீது டில்லிபாபு வியாழக்கிழமை ஏறி, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளாா். தகவல் அறிந்து வந்த வெள்ளவேடு போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் டில்லிபாபுவிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மாவட்ட நிா்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து, டில்லிபாபுவை பாதுகாப்பாக கீழே அழைத்து வந்தனா். அதைத் தொடா்ந்து மேல் விசராணைக்காக வெள்ளவேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com