உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு
By DIN | Published On : 11th September 2020 12:07 AM | Last Updated : 11th September 2020 12:07 AM | அ+அ அ- |

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே அமைந்துள்ள ராள்ளபாடியில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மன அழுத்தம், காதல் தோல்வி, கடன் பிரச்னைகள், குடும்ப வறுமை, கந்து வட்டி கொடுமை, பாலியல் வன் கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் நாள்தோறும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. மக்களுக்கு இந்த எண்ணத்தைத் தடுக்கும் வகையில், ஆண்டுதோறும், செப். 10-ஆம் நாள் உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ராள்ளபாடி மனநலம் பாதிக்கப்பட்டோா் மற்றும் ஆதரவற்றோா் இல்லத்தில் வசித்து வருவோா், தற்கொலைகளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பினா்.