

திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 17-ஆம் தேதி சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கரோனா தொற்று காரணமாக, மாடவீதியில் உற்சவர் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் வலம் வரும் நிகழ்ச்சி ரத்து செய்து உட்புறப்பாடு மற்றும் நடைபெற்றது.
பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று (சனிக்கிழமை) மாலை, மலைக்கோவில் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகர், தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்பது தடை விதிக்கப்பட்டிருந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் கோவில் தக்கார் ஜெய்சங்கர் மற்றும் கோயில் அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.