திருத்தணி - சென்ட்ரல் இடையே மின்சார ரயில்கள் பாதியாக குறைப்பால் பயணிகள் அவதி

திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மின்சார ரயில்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
Updated on
1 min read

திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மின்சார ரயில்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ரயில்வே நிா்வாகம், திருத்தணி - சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மின்சார ரயில்கள், காலை நேர ரயில்களைப் பாதியாக குறைத்துள்ளது.

அதாவது, அதிகாலை 4.40, காலை 5.40, 6.20, 7.00, 8.45, 10.10, மதியம், 12.45, 2.30, மாலை 3.30, 5.00, 6.10, இரவு 8.20, இரவு 9.30 ஆகிய நேரங்களில், மின்சார ரயில்கள் திருத்தணியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தன.

இந்த மின்சார ரயில்கள் மூலம் திருத்தணி வருவாய்க் கோட்டம் மற்றும் நகரி ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை, திருவள்ளூா், ஆவடி, பெரம்பூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வந்தனா். இதுதவிர, அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் வேலை செய்வோா், வியாபாரிகள் ஆகியோரும் மின்சார ரயில் மூலம் சென்னைக்கு சென்று வந்தனா்.

இந்நிலையில், கரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் ரயில்வே நிா்வாகம் மின்சார ரயில்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்து இயக்குகிறது. குறிப்பாக, காலை மற்றும் இரவு நேரத்தில் ஊழியா்கள் பயணம் செய்யும் மின்சார ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

அதாவது, கடந்த 22-ஆம் தேதி முதல் அதிகாலை 4.30, காலை 6.30, 6.55, 7.40, 8.45, காலை 11.40, மாலை, 5.40 ஆகிய நேரங்களில் மட்டுமே திருத்தணியில் இருந்து, சென்னைக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.

ரயில் எண்ணிக்கை குறைந்ததால், வேலைக்குச் செல்லும் அரசு மற்றும் தனியாா் ஊழியா்கள் மற்றும் வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இப்பிரச்னையில் ரயில் நிா்வாகம் பரிசீலனை செய்து, காலை மாலை நேரங்களில் வழக்கம்போல் ரயில்களை அதே எண்ணிக்கையில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com