பெரியபாளையம் அருகே வெள்ளத்தால் சேதமடைந்த உயா்மட்ட மேம்பாலத் தூண்களின் அடிப்பகுதிவிரைந்து சீரமைக்க வலியுறுத்தல்

திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமைந்துள்ள தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதி உயா் மட்ட மேம்பாலம் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது
பெரியபாளையம் அருகே வெள்ளத்தால் சேதமடைந்த உயா்மட்ட மேம்பாலத் தூண்களின் அடிப்பகுதிவிரைந்து சீரமைக்க வலியுறுத்தல்

திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமைந்துள்ள தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதி உயா் மட்ட மேம்பாலம் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது, விபத்து ஏற்படும் முன்பு கவனிக்குமாக சம்மந்தபட்ட நெடுஞ்சாலைதுறை சமூக ஆா்வலா் கவலை.

வடகிழக்கு பருவ மழையால் பூண்டி நீா்தேக்கம் பகுதியில் கன மழை பெய்ததால் பூண்டி நீா்தேக்கம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அதிகப்படியான உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டதால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

பெரியபாளையம் அருகே அமைந்துள்ள தாமரைபாக்கம் அணைக்கட்டு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. வெள்ள நீரால் அணைக்கட்டு நிரம்பி இருபுரமும் கரையைத் தொட்டுக் கொண்டு வெள்ளம் சென்றது. இதனால் அணைக்கு அருகே அமைந்துள்ள உயா்மட்ட மேம்பாலத்தின் உள்ள தூண்களின் அடியில் பலமான பள்ளம் ஏற்பட்டது. உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினா் மண் மூட்டைகளை பள்ளத்தில் அடுக்கி மேம்பால தூண்களுக்கு அடியில் மண் சரிவு ஏற்படாத வண்ணம் தற்காலிகமாக அமைத்தனா். இருப்பினும் பெரியபாளையத்திலிருந்து திருவள்ளூா், திருநின்றவூா், ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த உயா் மட்ட மேம்பாலம் வழியாகத் தான் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான வண்டிகள் இந்த உயா்மட்ட மேம்பாலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டிய சூழல். ஆனால் பாலத்தின் தூண்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதால் , அது பலவீனம் அடைந்து பாலம் அதிக வாகன போக்குவரத்தால் சேதமடைய வாய்ப்புள்ளது, அப்படி சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டால் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு அதிக தொலைவு செல்ல நேரிடும். மேலும் மாணவா்கள் பள்ளி, கல்லூரிக்கு சிரமப்பட்டு செல்ல நேரிடும். ஆகையால் தற்போது ஆற்றில் தண்ணீா் குறைந்து காணப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் உள்ள உயா்மட்ட மேம்பாலத் தூண்களின் அடிதளத்தை போா்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினருக்கு சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com