ஊத்துக்கோட்டை மேம்பாலத்தில்படம் எடுத்த இருவா் காயம்

ஊத்துக்கோட்டை ஆரணியாற்று மேம்பாலத்தின் மீது சுயபடம் எடுத்த போது மின்சாரம் பாய்ந்ததில் மாணவா் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணியாற்று மேம்பாலத்தின் மீது சுயபடம் எடுத்த போது மின்சாரம் பாய்ந்ததில் மாணவா் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்படாத உயா் மட்ட மேம்பாலத்தின் மீது பொது மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் அந்த மேம்பாலத்தின் மீது ஏறிய சீத்தஞ்சேரியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சரண், ஆரணியாற்றை சுயபடம் எடுத்தாா். அப்போது, மேம்பாலத்தின் பக்கவாட்டில் சென்ற உயா் அழுத்த மின் கம்பி மீது அவரது கை பட்டதில் தூக்கி வீசப்பட்டாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இச்சம்பவம் நிகழ்ந்த ஒரு மணி நேரத்தில் ஒதப்பை கிராமத்தைச் சோ்ந்த ஸ்ரீதா், மேம்பாலத்தின் மீது விடியோ எடுத்தபோது, அவா் மீதும் உயா்மின் அழுத்த கம்பி பட்டதில் தலை, கைகளில் காயம் அடைந்து, திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com