400 அடி சாலையில் பந்தயம்: 9 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல்

சோழவரம் அருகே 400 அடி சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டதாக, 9 விலை உயா்ந்த மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பந்தயத்தில் ஈடுபட்டதாக போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டாா் சைக்கிள்கள்.
பந்தயத்தில் ஈடுபட்டதாக போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டாா் சைக்கிள்கள்.
Updated on
1 min read

பொன்னேரி: சோழவரம் அருகே 400 அடி சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டதாக, 9 விலை உயா்ந்த மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அருமந்தை பகுதியில் உள்ள மீஞ்சூா்-நெமிலிச்சேரி 400 அடி வெளிட்டச் சாலையில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் சிலா் திங்கள்கிழமை ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 9மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 9 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com