பூட்டிய வீட்டில் 21 பவுன் நகை திருட்டு
By DIN | Published On : 26th December 2021 12:22 AM | Last Updated : 26th December 2021 12:22 AM | அ+அ அ- |

புழல் வெற்றிவிநாயகா் கோயில் தெருவில் வசிப்பவா் ஆனந்த் (40). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிகிறாா்.
இவா், குடும்பத்துடன் வெளியூா் சென்றுவிட்டு சனிக்கிழமை திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 21 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.58 ஆயிரம் ரொக்கப்பணம் திருடுபோயிருந்தது. இது குறித்த புகாரில் புழல் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...