பெரியபாளையம் அருகே கோயிலில் இருந்து திருடப்பட்ட 3 சாமி சிலைகள், நகைகள் மீட்பு: 7 பேர் கைது

பெரியபாளையம் அருகே கோயிலில் இருந்து திருடப்பட்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
சிலைகள் திருட்டு வழக்கில் கைதானோர்.
சிலைகள் திருட்டு வழக்கில் கைதானோர்.

பெரியபாளையம் அருகே கோயிலில் இருந்து திருடப்பட்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த அன்னதான காக்கவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் அண்மையில் சாமி சிலைகள் திருடப்பட்டன. இதே போல அருகில் உள்ள அம்மன் கோயில்களில் இருந்தும் நகைகள் திருடப்பட்டது. 

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை துணை கண்காணிப்பாளர் சாரதி மேற்பார்வையில் பெரியபாளையம் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில் பெரியபாளையத்தில் போலீசார் வாகன சோதனையில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்த ஒரு கும்பலை மடக்கி தீவிர விசாரணை நடத்தியதில் கோயில்களில் கொள்ளையடிக்கும் கும்பல் என்பது தெரியவந்தது. 
இதையடுத்து அவர்களிடம் இருந்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள 3 சாமி சிலைகள், 3 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோயில்களில் கொள்ளையடித்த கவிசெல்வமணி, அம்பேத்கர், சண்முகராஜ், கார்த்திக், ராஜி, ஏழுமலை, விஜயன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடத்தல் மற்றம் கொள்ளை கும்பலை கைது செய்த உதவி ஆய்வாளர் பார்த்திபன் ராஜ்பகதூர் மற்றும் போலீசார் நாகராஜ் லோகநாதன் அருணகிரி சௌந்தரராஜன் ராஜி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com