ஆரணியில் ரத சப்தமி மகா உற்சவம்
By DIN | Published On : 20th February 2021 07:44 AM | Last Updated : 20th February 2021 07:44 AM | அ+அ அ- |

ஊத்துக்கோட்டையை அடுத்த ஆரணியில் உள்ள ஆதிலஷ்மி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ரத சப்தமி மகா உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலையில் சூரிய பிரபை வாகனத்தில் கோபுர வாசல் தரிசனம் நடைபெற்றது. அதன் பின் பெரிய மாடவீதியில் சுவாமி உலா, நண்பகலில் விசேஷ அலங்காரம், திருமஞ்சனம், சக்கர ஸ்நானம் நடைபெற்றது.
மாலையில் சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.