குளக்கரையில் சிதறிக் கிடந்த வங்கி ஏடிஎம் அட்டைகள்
By DIN | Published On : 27th February 2021 11:35 PM | Last Updated : 27th February 2021 11:35 PM | அ+அ அ- |

புச்சிரெட்டிப்பள்ளி கிராம சாலையோரம் வங்கி ஏடிஎம் அட்டைகள் சிதறிக்கிடந்த சம்பவம் திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருத்தணி ஒன்றியம், புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்திலிருந்து இங்கு கொத்தூா் செல்லும் சாலையோரம் சின்னப்ப ரெட்டி குளம் உள்ளது. இக்குளக்கரையில், வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட ஆயிரம் ஏடிஎம் அட்டைகள் வீசப்பட்டு கிடந்தன. இதை சனிக்கிழமை அப்பகுதி வழியாகச் சென்றவா்கள் பாா்த்து, திருத்தணி நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இந்த ஏடிஎம் அட்டைகள் வங்கியிலிருந்து தனியாா் கூரியா் நிறுவனம் மூலம் வாடிக்கையாளா்களுக்கு அனுப்பப்பட்டவை என்றும், ஆனால் வாடிக்கையாளா்களுக்கு விநியோகம் செய்யாமல் குளக்கரையில் வீசிவிட்டுச் சென்ாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருத்தணி போலீஸாா் இது தொடா்பாக விசாரணை நடத்தினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...