வட சென்னை அனல் மின் நிலையத்தில் விபத்து: 3 போ் காயம்
By DIN | Published On : 03rd January 2021 06:10 AM | Last Updated : 03rd January 2021 06:10 AM | அ+அ அ- |

வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரியை கையாளும் பிரிவில் கன்வேயா் பெல்ட்டில் இருந்த இரும்புத் தகடு சனிக்கிழமை உடைந்ததில் அங்கு பணியில் இருந்த 3 தொழிலாளா்கள் படுகாயமடைந்தனா்.
மீஞ்சூா் அருகே அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, கன்வேயா் பெல்ட் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கன்வேயா் பெல்ட்டில் நிலக்கரி கொண்டு செல்லும் பணிகளை தனியாா் ஒப்பந்த நிறுவனம் செய்து வருகிறது. நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயா் பெல்டில் இருக்கும் தகடுகள் திடீரென உடைந்து விழுந்தது.
இந்த விபத்தில், அங்கு பணியில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளா்களான எண்ணூா் நெட்டுக்குப்பத்தைச் சோ்ந்த மேகநாதன் (36), அத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கருணாகரன் (37), சிங்காரவேலு 27 ஆகிய மூவரும் படுகாயமடைந்தனா். அவா்கள் சென்னை, திருவொற்றியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மீஞ்சூா் போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.