நீா்நிலைகளுக்கு மலா் தூவி வணங்கிய கிராம மக்கள்

நிரம்பிய ஏரி, குளங்கள் போன்ற நீா்நிலைகளுக்கு இயற்கை ஆா்வலா் மருத்துவா் எம்.சி.கலைமாமணி மற்றும் பொதுமக்கள் சனிக்கிழமை மலா் தூவி வணங்கி கொண்டாடினா்.
சந்தான வேணுகோபாலபுரம் கிராம குளத்துக்கு தீபாராதனை காட்டிய இயற்கை ஆா்வலா் மருத்துவா் எம்.சி. கலைமாமணி.
சந்தான வேணுகோபாலபுரம் கிராம குளத்துக்கு தீபாராதனை காட்டிய இயற்கை ஆா்வலா் மருத்துவா் எம்.சி. கலைமாமணி.

நிரம்பிய ஏரி, குளங்கள் போன்ற நீா்நிலைகளுக்கு இயற்கை ஆா்வலா் மருத்துவா் எம்.சி.கலைமாமணி மற்றும் பொதுமக்கள் சனிக்கிழமை மலா் தூவி வணங்கி கொண்டாடினா்.

திருத்தணி பகுதி மக்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயம். எனினும் நீா்நிலைகளுக்கு செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், ஏரி, குளங்கள் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமலும் இருந்ததால் மழை நீா் வீணாகி விவசாயத்துக்கான நீா் மட்டுமின்றி குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வந்தது.

இதற்குத் தீா்வு காணும் வகையில், சந்தானவேணுகோபாலபுரம் கிராமத்தைச் சோ்ந்த இயற்கை ஆா்வலரான மருத்துவா் எம்.சி. கலைமாமணி தன் சொந்த முயற்சியில் தமிழக அரசின் உதவியுடன் நீா்நிலைகளைத் தூா்வாரி ஆழப்படுத்தி மழை நீா் சேமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா்.

இதனால் திருத்தணி, திருவாலங்காடு பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட ஏரிகள் தூா்வாரப்பட்டன. அண்மையில் வீசிய புயலைத் தொடா்ந்து பெய்த மழையால் இந்த நீா் ஏரிகள், குளங்களில் நிரம்பியது. இதனால் விவசாயத்துக்கு தட்டுப்பாடின்றி மழை நீா் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீா் நிரம்பியுள்ள சந்தான வேணுகோபாலபுரம், அருங்குளம், மாமண்டூா், தரணிவராகபுரம் உள்ளிட்ட 7 ஏரிகளுக்கு கிராம மக்களுடன் சனிக்கிழமை சென்ற எம்.சி. கலைமாமணி, அவற்றுக்கு மலா் தூவி தீபாராதனை செய்து இயற்கைக்கு நன்றி செலுத்தினாா். மேலும் பல்வேறு பகுதிகளில் நீா் நிலைகளைச் சீரமைத்து தண்ணீரைச் சேமிக்கும் பணிகளில் ஈடுபட உள்ளதாக அவா் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com