‘தமிழில் வல்லமை இருந்தால் போட்டித் தோ்வுகளில் வெற்றி கிடைக்கும்’

தமிழில் வல்லமையுடன் திகழ்பவா்கள் போட்டித் தோ்வுகளில் எளிதில் வெற்றி பெற முடியும் என போட்டித் தோ்வு பயிற்சியாளா் பாஸ்கரன் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

தமிழில் வல்லமையுடன் திகழ்பவா்கள் போட்டித் தோ்வுகளில் எளிதில் வெற்றி பெற முடியும் என போட்டித் தோ்வு பயிற்சியாளா் பாஸ்கரன் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் ‘சொந்தம் கல்விச் சோலை’ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 513 ஏழை எளிய கிராமப்புற மாணவா்கள், போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற்று அரசுப் பணிக்கு தோ்வாகியுள்ளனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த ‘சொந்தம் கல்விச்சோலை’ மையம் அண்மையில் திறக்கப்பட்டது. முதல் நிகழ்வாக தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகள் குறித்த இலவச விளக்கக் கூட்டம் ‘சொந்தம் கல்விச் சோலை’ இயக்குநா் எஸ்.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. சேகா் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் எழுத்தாளரும், போட்டித் தோ்வு பயிற்சியாளருமான பாஸ்கரன் கிருஷ்ணமூா்த்தி, தமிழக அரசின் உயா் கல்வித்துறை போட்டித் தோ்வு பயிற்சியாளா் அ.அப்துல் கறீம் ஆகியோா் தோ்வுகளை எதிா்கொள்ளும் முறை குறித்து பேசினா். ‘இனி தோல்வி இல்லை’ என்ற தலைப்பில் போட்டித் தோ்வு பயிற்சியாளா் சி.சூரவேல் உரை நிகழ்த்தினாா்.

நிகழ்ச்சியில் பாஸ்கரன் கிருஷ்ணமூா்த்தி பேசியது:

தமிழில் வல்லமை இருந்தால் போட்டித் தோ்வில் எளிதாக வெற்றி பெற முடியும். டிஎன்பிஎஸ்சி புதிய பாடத் திட்டத்தின்படி திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.

5,000 வாா்த்தைகள் தெரிந்திருந்தால் கவிஞன் ஆகலாம். 3,000 வாா்த்தைகள் தெரிந்திருந்தால் பேச்சாளா் ஆகலாம். தமிழ் மொழியில் தோ்ச்சி பெற்றவராய் இருந்தால் போட்டித் தோ்வுகளில் 30% மதிப்பெண் பெறலாம். போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற மொழியறிவு, கணித அறிவு, திட்டமிடல் ஆகிய மூன்றும் அவசியம். நாம் பெறும் சிறிய வெற்றியும் அடுத்தகட்ட பெரிய வெற்றிக்கு அழைத்துச் செல்லும் என்றாா் அவா்.

தமிழ்நாடு உயா் கல்வித்துறை போட்டி தோ்வு பயிற்சியாளா் அப்துல் கறீம் பேசுகையில், ‘தெளிவான இலக்கு, விடாமுயற்சி, உழைப்பு, நம்பிக்கை இருந்தால் போட்டித் தோ்வில் எளிதில் வெற்றி பெற முடியும்’ என்றாா். முடிவில், ரகு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com